பசுமையான எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், பிரதம மந்திரி ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (PM-RKVY) மற்றும் கிரிஷோன்னதி யோஜனா ஆகியவற்றின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிலையான விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒரு மகத்தான படி என மத்திய அரசு கூறியுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாயப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.