சமூக வலைதளங்களில் பிரபலமான சாமியார் அன்னபூரணி அரசு அம்மா. இவர் தன்னை ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் என கூறி வருவதுடன், அவ்வப்போது பக்தர்களுக்கு ஆசியும் வழங்கி வருகிறார். அன்னபூரணி அரசு அம்மா சமீபத்தில் 3வது திருமணம் செய்துகொண்ட நிலையில், தனது கணவர் ரோகித் உடன் சேர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னை பார்க்க வந்த பக்தர்களுக்கு இருவரும் அருளாசி வழங்குகின்றனர்.