முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், கோடிக்கணக்கான தமிழர்களையும் - இலட்சக்கணக்கான உடன்பிறப்புகளையும் தன் உள்ளத்தில் தாங்கி, வாழ்நாளெல்லாம் ஒரு தாய் என நமக்கானவற்றைப் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுத்த கலைஞரது மகத்தான வாழ்வை எ.வ.வேலு அய்யன் வள்ளுவரின் குறள்களால் வடித்துள்ளார். கலைஞர் எழுதினால் மட்டுமல்ல; கலைஞரைப் பற்றி எழுதினாலும் தமிழ் கொட்டும் என்று காட்டி, எழுத்திலும் வல்லவராகியிருக்கிறார் எதிலும் வல்லவர் வேலு என பதிவிட்டுள்ளார்.