விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா, இண்டிகோ

58பார்த்தது
விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா, இண்டிகோ
வங்கதேசத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து அந்நாட்டுக்கான விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே ரத்து செய்துள்ளது. சமீபத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஏர் இந்தியாவின் பாதையை பின்பற்றியது. இண்டிகோ ஏர்லைன்ஸ், டாக்காவிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து இண்டிகோ சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவினால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி