மீண்டும் குறைந்தது சிலிண்டர் விலை

59பார்த்தது
மீண்டும் குறைந்தது சிலிண்டர் விலை
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 31 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4வது மாதமாக வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி