விருதுநகரில் நடிகை ராதிகா போட்டி?

89797பார்த்தது
விருதுநகரில் நடிகை ராதிகா போட்டி?
பாஜக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பாஜக உடன் சரத்குமார் கூட்டணி அமைத்தார். இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், திமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போதைய எம்.பியாக மாணிக்கம் தாகூர் உள்ளார்.

தொடர்புடைய செய்தி