நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில், 12 மீனவர்கள் மற்றும் அவர்களது படுகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், “இந்த கைது நடவடிக்கை தொடர்வதுடன், மீனவ குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துகும் இடையூராக உள்ளது. இந்தாண்டு மட்டும் 30 முறை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.