கேரளாவின் ஆற்றுக்கால் என்னும் இடத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயத்திற்கு பல்வேறு தனி சிறப்புகள் உண்டு. இந்த கோயிலில் உள்ள ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். ஆலய கருவறையில் இரண்டு அம்பாள் சிலைகள் உள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. இங்குள்ள அம்பாளை முழு நம்பிக்கையுடன் மனமுருகி பிரார்த்தித்தால் நோய் நொடி இல்லாத அற்புத வாழ்வை பெறலாம்.