போதை ஊசி செலுத்திக்கொண்ட வாலிபர் பலி

52பார்த்தது
போதை ஊசி செலுத்திக்கொண்ட வாலிபர் பலி
சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் ஜாபருல்லா (23). இவருக்கு மது மற்றும் போதை மருந்து பழக்கம் இருந்துள்ளது. சமீபத்தில் அவர் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீஸ் விசாரணையில், ஜாபருல்லாவும், அவரது நண்பரும் போதை மருந்து ஊசி பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்றும் ஜாபருல்லா போதை ஊசி செலுத்தியதால் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி