கன்னியாகுமரி நாகர்கோவிலில் இருந்து சிறமடத்திற்கு இயக்கப்பட்டுவரும் அரசு பேருந்தின் நடத்துநர் சசி (55), பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, பள்ளிக்குச் செல்லாமல் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர், ஊர் மக்களுடன் சேர்ந்து நடத்துநரை அடித்து உதைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், நடத்துநர் சசியை கைது செய்து போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்