கிங்பிஷர் பீர் பாட்டிலில் பிளாஸ்டிக் ஸ்பூன்

63பார்த்தது
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள டான் நகரில் கிங்பிஷர் பீர் வாங்கிய இளைஞருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. பீர் வாங்கிய வாடிக்கையாளர் பிளாஸ்டிக் ஸ்பூன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கடையின் உரிமையாளரிடம் விசாரித்தபோது, ​​தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இதுகுறித்து நந்தியாலா மாவட்ட அதிகாரியிடம் புகார் அளியுங்கள் என்றும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஸ்பூன்-ஐ தவிர வேறு கண்ணுக்குத் தெரியாத பொருள் ஏதாவது இருந்தால் எங்களின் நிலை என்ன? என கேள்வியெழுப்பிபடி ஊழியர்களை கடிந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி