முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு

65பார்த்தது
முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு
தஞ்சாவூர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு தற்போது வரத்து குறைவு காரணமாக முருங்கைக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.50 வரை விற்பனையான முருங்கைக்காய் விலை உயர்ந்து நேற்று ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெண்டைக்காயும் விலை அதிகரித்தது.

விளைச்சல் அதிகரித்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது. அதேபோல் அவரை ரூ.120, பீன்ஸ் ரூ.110, சின்ன வெங்காயம் ரூ.66, தக்காளி ரூ.66, பாகற்காய் ரூ.86. பீர்க்கங்காய் ரூ.66, முள்ளங்கி ரூ.44, பச்சை மிளகாய் ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி