மோசமான சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது!

60பார்த்தது
மோசமான சாலைகளுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது!
மோசமான சாலை இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ள அவர், சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும்தான் சுங்கக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், மோசமாகவும் இருக்கும் இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. குண்டும் குழியுமாகவும், சேறு நிறைந்ததாகவும் சாலைகளை வைத்துக் கொண்டு அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க முற்பட்டால், மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி