கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம்

75பார்த்தது
கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம்
கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன்படி அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில் கொளத்தூர், பெரவள்ளூர், சிறுவள்ளூர் உள்ளிட்ட 3 கிராமங்கள் உள்ளன. 3,78,168 பொதுமக்கள் வசிக்கும் கொளத்தூர் வட்டத்தில் பொதுப் பிரிவு, சமூக பாதுகாப்பு பிரிவு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி