நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன்
விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச 28ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கேப்டன்
விஜயகாந்த் செல்லப்பிராணிகள் மீது அளவுகடந்த அன்பு கொண்டவர். தன் வீட்டில் கால்நடைகள், செல்லப்பிராணிகள் என வளர்த்து வந்தார். இந்நிலையில் அவர் செல்லமாக வளர்த்த நாய் குட்டி ஒன்று எங்கே என் கேப்டனை காணவில்லை என்பதை போல் ஏக்கமாக பார்க்கும் காட்சி தற்போது வெளியாகி இணையத்தை கலங்கச்செய்துள்ளது.