அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஜெஸி ஸ்டோன் (14) என்ற சிறுவன் கடந்த ஜூன் 9-ல் வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த 91 வயது மூதாட்டியை தாக்கியதோடு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பான புகாரில் ஸ்டோனை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தன் மீதான குற்றத்தை அண்மையில் ஒப்பு கொண்டார். அவருக்கான தண்டனை விபரம் டிச. 19-ல் அறிவிக்கப்படவுள்ளது.