ஐக்கிய நாடுகள் சபையால் 1996 முதல் ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 21-ல் உலகத் தொலைக்காட்சி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலமாக சமூகத்தில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தையும், தாக்கத்தையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. செய்திகள், பொழுதுபோக்கு, திரைப்படங்கள், கல்வி, இசை, விளையாட்டு என எல்லாமும் தொலைக்காட்சிகளின் வழியே நமக்கு கிடைக்கிறது.