ராஜஸ்தான் பாரத்பூர் மாவட்டம் ஸ்ரீநகர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 8 பேர் பங்கா ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது ஒரு இளைஞர் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த சக இளைஞர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த 7 இளைஞர்களும் தண்ணீரில் மூழ்கினர். இதில், ஒரே ஒரு இளைஞர் மட்டும் உயிர் தப்பி கிராமத்திற்கு சென்று உதவிகேட்டுள்ளார். விரைந்து வந்த கிராம மக்கள் தண்ணீரில் மூழ்கிய 7 இளைஞர்களையும் சடலமாக மீட்டனர்.