விருதுநகர் வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு 6,000 ஆண்டுகளுக்குப் பழமையான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜாஸ்பர், சார்ட் என்ற இந்த கற்களை அந்த கால மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடும் கருவிகள் தயாரிக்க மூலப் பொருளாக பயன்படுத்தியுள்ளனர். முத்து மணிகள், சுடுமண்ணால் ஆன பகடைக் காய்கள், சங்கு வளையல்கள், பாசி மணிகள் போன்ற 7,900-க்கும் அதிகமான தொல்பொருட்கள் கிடைத்திருப்பதாக அகழாய்வு இயக்குனர் தெரிவித்துள்ளார்.