6 பந்துகளில் 6 சிக்சர்கள்...இங்கிலாந்து வீரரிடம் அடி வாங்கிய உத்தப்பா

71பார்த்தது
6 பந்துகளில் 6 சிக்சர்கள்...இங்கிலாந்து வீரரிடம் அடி வாங்கிய உத்தப்பா
முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் ஹாங்காங் இண்டர்நேஷனல் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் ரவி போபாரா, இந்திய கேப்டன் ராபின் உத்தப்பா வீசிய ஓவரில் 6 பந்திலும் சிக்சர்களை விளாசினார். அந்த ஓவரில் ஒரு ஒயிட் உட்பட 37 ரன்களை உத்தப்பா விட்டுக்கொடுத்தார். இப்போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 121 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்தியா தோல்வியடைந்தது. முன்னதாக பாகிஸ்தான், யுஏஇ ஆகிய அணிகளுக்கு எதிராகவும் தோற்றதால் தொடரிலிருந்தும் இந்தியா வெளியேறியது.

தொடர்புடைய செய்தி