ராஜஸ்தான் ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் 25 புலிகளை காணவில்லை என்று சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குள் 10 புலிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முன்பு 2019-2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 13 புலிகள் மாயமாகியுள்ளன. 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 88 புலிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.