22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை - அறிக்கை

54பார்த்தது
22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை - அறிக்கை
எஸ்பிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி ஏப்ரல் 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை ஆக்கியுள்ளன. இதில் 22,030 தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2018-ல் நடைமுறைக்கு வந்தது. இதனை குறிப்பிட்ட சில கிளைகளில் மட்டுமே எஸ்பிஐ விற்பனை செய்து வந்தது. ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரையில் இந்த பத்திரங்கள் பல்வேறு மதிப்புகளில் விற்பனை செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி