இந்திய தேர்தல் ஆணையத்தில் 2 காலி இடங்கள்

82பார்த்தது
இந்திய தேர்தல் ஆணையத்தில் 2 காலி இடங்கள்
3 ஆணையர்களைக் கொண்ட அமைப்பான இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது 2 பதவிகள் காலியாக உள்ளது. கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தின் படி, பிரதமர், மத்திய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு இனி புதிய ஆணையர்களை தேர்வு செய்யலாம்‌. ஏற்கனவே ஒரு பதவி காலியாக இருந்த நிலையில், அருண் கோயலின் ராஜினாமாவால் காலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளதால், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே ஆணையர்கள் நியமனம் செய்யப்படலாம். தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம், ஆளுங்கட்சிக்கே சாதகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.