பரோட்டா சாப்பிட்ட 11 வயது சிறுவன் பலி?.. போலீஸ் விசாரணை

74பார்த்தது
சென்னை ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயிலைச் சேர்ந்த 11 வயது சிறுவன், கடந்த 24ஆம் தேதி இரவு பரோட்டா சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு இரண்டு நாட்களாக வயிறு வலிப்பதாக கூறி வந்துள்ளார். இன்று தீவிர வயிற்று வலி ஏற்பட்டதால் சிறுவனை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார். தொடர்ந்து, பரோட்டா சாப்பிட்டதன் காரணமாக சிறுவன் இறந்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி