10 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழ்நாடு வருகை

58பார்த்தது
10 கம்பெனி துணை ராணுவப்படையினர் தமிழ்நாடு வருகை
நாடு முழுவதும் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என அணைத்து தரப்பினரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் பணிக்காக மேலும் 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் இன்று தமிழ்நாடு வர உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே 15 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழ்நாடு வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி