சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்துள்ள படம் புஷ்பா-2. இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் படத்தின் சுவாரசியமான அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்னும் 200 நாட்களில் 'புஷ்பா தி ரூல்' திரையாங்கில் வெளியாகும் என போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.