உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஜொமோட்டோவின் (ZOMATO) பங்கு விலை இன்றைய வர்த்தகத்தில் 2% அதிகரித்து ரூ.115 என்ற நிலையை அடைந்தது. இது கடந்த ஓராண்டில் இல்லாத அளவு உச்சமாகும். இந்த நிறுவனம் ஐஆர்சிடிசியுடன் (IRCTC) இணைந்து டில்லி, பிரயாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய ரயில் நிலையங்களில் டெலிவரி சேவையை விரைவில் தொடங்க உள்ளது. இதுவே பங்கு விலை உயர காரணம் என்று
பங்குச்சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.