வயநாட்டில் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களை மத்திய அரசு புறக்கணித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 240-க்கும் மேற்பட்டடோர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். இந்த துயரத்தை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனை கண்டித்து வருகிற செவ்வாய்க்கிழமை வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.