ஆவின் பாலில் நீச்சலடித்த புழுக்கள்.. அதிர்ச்சி வீடியோ

76134பார்த்தது
தேனீர் கடைக்காக வாங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் வெள்ளை நிற புழுக்கள் மிதந்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள தேனீர் கடையில், ஆவின் பாலத்தில் பால் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். பின்னர் கடைக்கு வந்து பாலை பாத்திரத்தில் ஊற்றியுள்ளார். அப்போது பாலில் ஏராளமான வெள்ளை புழுக்கள் மிதந்துகொண்டிருந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த அதிகாரிகள் பால் மற்றும் பாக்கெட்டுகளை சோதனையிட்டனர். அதில் இன்றைய தினம் கடைசி தேதி குறிப்பிடப்பட்டு பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி