ஹரியானாவில் கவிழும் பாஜக ஆட்சி?

75பார்த்தது
ஹரியானாவில் கவிழும் பாஜக ஆட்சி?
ஹரியானாவில் கவிழும் நிலையில் உள்ள பாஜக அரசால் மாநிலக் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றுள்ளனர். சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேரும் தங்களது ஆதரவை இந்தியா கூட்டணிக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள 90 இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக 40, எச்எல்பி 1, சுயேச்சை 1) 42 உறுப்பினர்களின் பலத்தை மட்டுமே கொண்டுள்ளது.