பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "நீலகிரி விழாவில் பங்கேற்பதால் ராமேஸ்வரத்தில் மோடி பங்கேற்கும் விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை. நீலகிரி விழா குறித்து ஏற்கனவே பிரதமர் மோடிக்கு தெரிவித்து விட்டேன். விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளார்கள்" என்று தெரிவித்துள்ளார்.