எந்திரன் படத்தில் இருந்து விலகியது ஏன்? கமல்ஹாசன்

62பார்த்தது
எந்திரன் படத்தில் இருந்து விலகியது ஏன்? கமல்ஹாசன்
சங்கர் இயக்கத்தில் வெளியான ரோபோ (எந்திரன்) படத்திலிருந்து தான் ஏன் விலகினேன் என்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அதில், "எந்திரன் படத்தில் நடிக்க முதலில் ஷங்கர் என்னை அணுகினார். ஆனால் அப்போது கால்ஷீட், அப்போதைய மார்க்கெட், சம்பளம் போன்ற காரணங்களால் நான் விலகிவிட்டேன். அதனையடுத்து அந்தப் படத்தை ஷங்கர் விட்டுவிடுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் ரஜினியை வைத்து எடுத்து மிகப்பெரிய ஹிட்டை கொடுத்துவிட்டார்" என்றார். முன்னதாக இந்தியன் படத்தின் கதையில் முதலில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டியதிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி