நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் 'லோகேஷ் கனகராஜ்', ‘விக்ரம்’ படத்தின் மூலம் யுனிவர்ஸ் படங்களை உருவாக்கிய போது எனக்கு தெரிந்த பலரும் பாராட்டினார்கள். முதல் 3 படங்கள் அடித்தளமாக இருக்கும், 4-வது படம் அஸ்திவாரம், 5-வது படம் அடுத்த அஸ்திவாரம், 6-வது படம் க்ளைமாக்ஸுக்கு முந்தைய படம், 7-வது அல்லது 8-வது படம் முடிவாக இருக்கும். அந்த வரிசையில் அடுத்து ‘கைதி 2’ இயக்கவுள்ளேன். ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக இயக்கவுள்ளேன். ‘விக்ரம் 2’ இயக்கி எல்சியூ யுனிவர்ஸை முடிக்கவுள்ளேன் என கூறியுள்ளார்.