இந்து சமயத்தில் காளராத்திரி எனப்படும் சக்தி மிகுந்த இரவுகளில் மஹா சிவராத்திரி இரவும் ஒன்று. ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்ட போது தேவர்களும், முனிவர்களும் இரவு முழுவதும் கண்விழித்து விஷத்தின் தாக்கம் விலக வேண்டி வழிபட்டனர். அறிவியல் காரணங்களின்படி பூமியின் காந்தவியல் தன்மை சிவராத்திரி அன்று அதிகமாக இருப்பதால் அந்நேரத்தில் விழித்திருப்பது உடலுக்கு ஆற்றல்களை வழங்கும் என நம்பப்படுகிறது.