யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காதது, புரியாத புதிராக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும், “இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முதலில் சொன்னார். பின்னர், உதயநிதியுடன் அமர்ந்து இர்ஃபான் சாப்பிட்ட காட்சி வெளிவந்தவுடன், இர்ஃபான் செய்தது கொலைக் குற்றமா? என்றார். இந்த மக்கள் நல்வாழ்வுத்துறை மக்களின் உயிரை காக்கும் துறையா? மக்களின் உயிரை பறிக்கும் துறையா?” என விமர்சித்துள்ளார்.