வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு சொற்பொழிவு நடைபெற்றது

574பார்த்தது
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போரிட்ட 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாளையக்காரர் ஆன வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்த நாள் விழா (ஜனவரி 3) தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் விருதுநகரில் அவரது நினைவை போற்றும் சொற்பொழிவு விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் பாண்டூ ரங்கன் தலைமையில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது இதில் *நாகலாந்து கவர்னர் இல. கணேசன்* கலந்து கொண்டு கட்டபொம்மன் நினைவு சொற்பொழிவை நிகழ்த்தினார். அப்போது பேசிய ஆளுநர் இல. கணேசன் பாஞ்சாலங்குறிச்சி போர் என்ற புத்தகத்தை படித்த பிறகு தான் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய தெளிவு பிறந்தது என்றும், பாளையத்தை காக்க மட்டும் அவர் போர் புரியவில்லை உண்மையிலே யே தென் தமிழகத்தில் நடந்த பாளைய யுத்தம் தான் முதல் சுதந்திர யுத்தம் என்றும் ஆனால் 1857ல் நடந்த யுத்தமே முதல் யுத்தமாக கருதப் படுகிறது காரணம் ஒட்டு மொத்த நாடும் அப்போது தான் கொதித்து எழுந்தது என்றார். மேலும் விடுதலைக்காக தன் குடும்பம் மற்றும் உறவினர்கள் என அனைவரையும் இழந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் எனவும் ஆனால் சமீப காலமாக தலைவர்கள் மட்டுமே சிறைப்படுகிறார்கள் தன் மனைவி மக்களை காப்பாற்றி விடுகிறார்கள் என்றார்.

தொடர்புடைய செய்தி