காரியாபட்டி சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ. 3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்* *வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்களிடம் வழங்கினார்கள். *
---
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(20. 02. 2024) காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST) சார்பில் ரூ. 3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்களிடம் வழங்கினார்கள்.
அதன்படி, காரியாபட்டி வட்டம், சித்தனேந்தல் பால்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (PRAISE TRUST ) சார்பில் 7 இ. சி. ஜி உபகரணங்கள் மற்றும் முடுக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடையில்லாத மின்சாரம் பெறுவதற்காக யு. பி. எஸ் என மொத்தம் ரூ. 3 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் துணை இயக்குநர்கள்(சுகாதாரப்பணிகள்) திருமதி மரு. யசோதாமணி(விருதுநகர்), மரு. கலுசிவலிங்கம்(சிவகாசி), ப்ரைஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் திருமதி சினேகலதா பொன்னையா, எஸ். பி. எம் அறக்கட்டளை நிறுவனர் திரு. எம். அழகர்சாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.