கோவை துடியலூரில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் இல்லம், மார்ட்டின் குழும அலுவலகம்,
ஹோமியோபதி கல்லூரி உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், விசிக துணைப் பொதுச் செயலாளரும், மார்ட்டினின் மருமகனுமான ஆதவ் அர்ஜுனா வீட்டில் நடந்த சோதனை நேற்றைய தினமே நிறைவடைந்தது.