நடிகை கஸ்தூரி பேசத் தெரியாம பேசி மாட்டிக் கொண்டார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நுணலும் தன் வாயால் கெடும்' என்பது போல பேசத்தெரியாமல் பேசி மாட்டிக் கொண்டார். அவர் பேசியது கண்டிக்கத்தக்கது. நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட பிறகும் தீவிரவாதியை பிடிப்பது போல் சென்று பிடித்துள்ளார்கள். கஸ்தூரிக்கு நடந்தது அநியாயம் என்றார்.