சென்னையில் BMW சொகுசு கார் மோதி ராபிடோ ஊழியர் உயிரிழந்தார். மதுரவாயல், தாம்பரம் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார், டூவீலர் மீது மோதியதில், பாண்டி பஜாரை சேர்ந்த பிரதீப் குமார் என்ற ராபிடோ ஊழியர் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
ஒரு மணி நேர தேடுதலுக்கு பின், புதரில் இருந்து உடலை போலீசார் மீட்டனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் ஓட்டுநரை போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.