தனியார் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

63பார்த்தது
ஒயிட் ஃபில்டு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் R. ராஜ்குமார் அவர்கள் கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். அதில் முதல்வர் B. வனிதா அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் மாணவர்கள் தேசத் தலைவர்கள் போன்று வேடம் அணிந்து, மற்றும் சிலம்பம் சுற்றி பள்ளிக்கு அருகில் உள்ள தெருக்களில் பேண்ட் வாத்தியம் முழங்க மாணவர்கள் ஊர்வலம் சென்று தங்களின் தேசப்பற்றை உணர்த்தினர். பின்னர் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி விழா இனிதே நடைப்பெற்றது.

தொடர்புடைய செய்தி