சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சிவன் கோவிலில் 'அன்ன அபிஷேகம்'. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அருகே உள்ள திருத்தங்கலில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் நேற்று இரவு ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அன்ன அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக,
ஸ்ரீ கருநெல்லிநாத சுவாமிக்கும் - ஸ்ரீஅம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கோவில் வளாகம் மற்றும் அனைத்து சன்னதிகளிலும் காய்கறிகளால் தோரணம் கட்டி அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து, மூலவர் ஸ்ரீகருநெல்லிநாத சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்ன அபிஷேக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.