இராஜபாளையம்: ஆம்புலன்ஸ் தீயில் எரிந்து நாசம்...

66பார்த்தது
இராஜபாளையம் அருகே குப்பைக்கு வைத்த தீ பரவி
ஆம்புலன்ஸ் எரிந்து நாசம்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்த மான ஆம்புலன்ஸ் கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கி பழுதானது. இதனை சரி செய்வதற்காக சேத்தூர்
மாலையம்மன் கோவில் அருகே உள்ள பழுது நீக்கும் கடைக்கு முன் சாலையோரம் நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் அந்த வாகனத்தின் அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் தீவைத்ததாககூறப்படுகிறது. அப்போது எதிர் பாராதவிதமாக அருகில் இருந்த ஆம்புலன்சு மீது தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர், இருப்பினும் ஆம்புலன்ஸ் எரிந்து நாசமானது. இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி