விருதுநகர் மாவட்டம், செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -சேலம் கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16845) வரும் ஜுன் 12, 14, 16 ஆகிய தேதிகளில் பகுதி நேரமாக ஈரோடு-கரூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும், இந்த ரெயில், கரூரில் இருந்து மதியம் 3. 05 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.
அதே தேதிகளில், செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு ஈரோட்டிற்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16846), கரூர்-ஈரோடு இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது