இராஜ: ஆலங்குளத்திற்கு கூடுதல் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை..

73பார்த்தது
இராஜபாளையம் அடுத்த ஆலங்குளத்திற்கு கூடுதல் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அடுத்த ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து எண்ணற்ற மாணவ, மாணவிகள் பிள்ளையார்குளம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரிக்கு எளிதில் செல்லும் வகையில் போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே ஆலங்குளத்தில் இருந்து பிள்ளையார்குளம் அரசு கலை கல்லூரிக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும். இதன் மூலம் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களில் உள்ளவர்களும் பயன்பெறுவர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி