இராசபாளையம் - Rajapalayam

இராஜபாளையம்: பால் வியாபாரி கொலை; மனைவி, மகள் கைது

விருதுநகர் மாவட்டம். ராஜபாளையம் அடுத்த எம்.பி.கே புதுப்பட்டியை சேர்ந்தவர் பால் வியாபாரி சுப்பிரமணியம் 60, இவரது மனைவி ஈஸ்வரி 55, மகள் தேவயானியை சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.  தேவயானிக்கும் கணவருக்கும் தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். மேலும் பலமுறை கார்த்திக் வந்து மனைவியும் குழந்தைகளை அழைத்துச் செல்ல முயன்றபோது, சுப்பிரமணியம் அனுப்பி வைக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து சுப்பிரமணியத்திற்கும் அவரது மனைவி, மகளுடன் தகராறு ஏற்பட்டுவந்தது.  இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 15)  இரவு சுப்பிரமணியம் வீட்டில் தூக்கிலிட்டுத் தொங்கியவாறு காணப்பட்டார். அவரது உடலை பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டபோது, உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டன. இந்நிலையில் இறந்தவரின் தம்பி சஞ்சீவி வடக்கு காவல் நிலையத்தில் தனது அண்ணன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவரது மனைவி ஈஸ்வரி, மகள் தேவயானி, மைத்துனர் செல்வகுமார் ஆகிய மூவரையும் அழைத்து விசாரணை செய்தபோது வாக்குவாதம் முற்றியதால் மூவரும் சேர்ந்து அடித்து கொலை செய்ததாகத் தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்தனர்.

வீடியோஸ்


விருதுநகர்