முன்னேற்றமடைந்த மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் அறிவிப்பு

73பார்த்தது
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் கடந்த 2018-ம் ஆண்டு நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து, அதிலிருந்து 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த 112 மாவட்டங்களில் தமிழகத்தில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.

முன்னேற விழையும் மாவட்டங்களில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர் வள ஆதாரங்கள், அனைவருக்குமான நிதிச் சேவைகள் மற்றும் திறன் வளர்ப்பு, சாலை வசதி, குடிநீர், ஊரக மின் வசதி, தனிநபர் இல்லக் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 49 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தக் காரணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்கள், ஒவ்வொரு மாதமும் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மாதத்தின் இறுதியில் தரவரிசை வெளியிடுகிறது. அந்த வகையில் இந்த பட்டியலில் உள்ள விருதுநகர் மாவட்டம் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது. இதற்காக முன்னேற விழையும் மாவட்டங்கள் திட்டத்தின் (ADP (Aspirational District Program)) கீழ் விருதுநகர் மாவட்டம் ரூ. 3 கோடி விருதையும் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி