அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு சத்குரு வீரபத்திர வாத்தியார் சுவாமி குருபூஜை விழா சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனையுடன் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் மிகப் பழமை வாய்ந்த சத்குரு வீரபத்திர வாத்தியார் சுவாமி ஜீவ சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இன்று பிப்ரவரி 21 பிற்பகல் 1 மணி அளவில் மாசி மாத புனர்பூச நட்சத்திரத்தை முன்னிட்டு குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜை விழாவை முன்னிட்டு ஸ்ரீ வீரபத்திர வாத்தியார் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், தயிர், மஞ்சள், பழ கலவைகள் என பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அதையடுத்து அடுக்கு தீபம், நாகதீபம், மயூரதீபம், குக்குட தீபம், ரிஷப தீபம், கஜதீபம், புருஷாமிருக தீபம், புருஷ தீபம், அஸ்திர தீபம் என 11 வகையான தீப ஆராதனைகளுடன் மகா தீப ஆராதனை நடைபெற்றது. குருபூஜை விழாவை முன்னிட்டு ஸ்ரீ வீரபத்திர வாத்தியார் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த குருபூஜை விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.