விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி அறிவுரை வழங்கிய அமைச்சர்

76பார்த்தது
அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்து கொண்டு 250 மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி துவக்கி வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் பள்ளி மாணவியர்களின் பரத நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. ‌

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்,

மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை வீணடிக்க கூடாது. இது ஒரு போட்டியான உலகம். ‌ முன்பு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு படித்தாலே வேலை கிடைத்து விடும். ஆனால் தற்போது 100 பேரை அழைத்து அதில் தகுதியானவர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கும் சூழல் உள்ளது. ‌ மாணவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சிறப்பாக படிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு இருக்கிறது. ‌ மாணவர்களின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்ட முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர் உள்ளார்‌ என பேசினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி