பன்றிகளை வளர்க்க விரும்புபவர்கள் அதற்கென தகுந்த இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும். பன்றிகளை வீட்டிலேயே வளர்த்தாலோ, குறிப்பாக சுகாதார முறைப்படி பராமரிக்கப்படாத இடத்தில் வளர்த்தலோ நியூரோசிஸ்டிசெர்கோசிஸ் (Neurocysticercosis) எனும் மனிதர்களுக்கு கடுமையான நரம்பியல் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.
நியூரோசிஸ்டிசெர்கோசிஸ் நோய்க்கான முக்கிய காரணிகள் பன்றிகள் வளர்ப்பதற்கான சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாகும். இது பொது மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்;து விளைவிக்கும். அரசு சட்டத்தின் கீழ் நெறிமுறைகளை பின்பற்றாமல் சுகாதாரக் கேடாக குடியிருப்பு பகுதிகளில் பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. மேலும், பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படுவதோடு உரிய வழக்;குகளும் பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.